Tuesday 24 October 2017

கப்பல் பறவை (Frigate bird)

கடலை நம்பி வாழும் பறவைகளும் கூட கடல் உயிர்கள்தானே. அந்த வகையில் கப்பல் பறவை எனப்படும் Frigate பறவையைப் பற்றி இப்போது பார்ப்போம்.
தமிழில் இந்த பறவையின் பெயரை முதல்முதலில் மொழிபெயர்த்தவர்போர்க்கலப் பறவைஎன்று மொழிபெயர்த்திருப்பார் என்று தோன்றுகிறது. ‘போர்ப்பறவைஎன்றும் இது அழைக்கப்படுகிறது. ‘கப்பல் பறவை‘ ‘மாலுமிப் பறவைஎன்பதெல்லாம் இந்த பறவையின் இதரப் பெயர்கள்.
கப்பல் பறவைகளில் 5 வகைகள் இருந்தாலும், தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்பகுதிகளில் 3 வகையான கப்பல் பறவைகளைக் காணலாம். பெரியது, சிறியது, கிறிஸ்துமஸ் தீவு (ஆஸ்திரேலியா) கப்பல் பறவை போன்றவை இந்த மூன்று வகைகள்.
கப்பல்பறவை, பெலிகான் (Pelican) என ஆங்கிலத்திலும் கூழைக்கடா, மந்தாளி கொக்கு, பைநாரை என்றெல்லாம் தமிழிலும் அழைக்கப்படும் பறவைக்கு உறவுக்கார பறவை.
கோழி அளவுள்ள பெரிய பறவையான இது. வெப்பக்கடல்களில் மட்டும் காணக் கூடிய பறவை இனம். கருமை கலந்த பழுப்பு அல்லது கறுப்பு இதன் நிறம். அகலச் சிறகும், வளைந்த அலகு முனையும் கப்பல் பறவையின் முதன்மை அடையாளங்கள்.
நீட்டமான பிளந்த வால் கொண்ட பறவை இது. பறக்கும்போது வாலை ஒட்டியும், சிலவேளைகளில் விரித்தும் இது பறக்கும்.
7 முதல் 8 அடி நீளச் சிறகுகளால், சிறகுகளைத் தட்டாமல் 12 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கக் கூடிய பறவை இது. Cumulus எனப்படும் குவிமேகம் அல்லது மேகத்திரள் கூட்டங்களுக்கு நடுவிலும் இது பறக்க வல்லது.
மணிக்கு 40 மைல் வேகத்தில், நாளொன்றுக்கு 300 மைல் வரை கப்பல் பறவை பறந்து திரியும். ஒரு வாரம் வரை கூட தொடர்ந்து கப்பல் பறவையால் பறக்க முடியும்.
கப்பல் பறவையின் இறக்கைகளில் மிதப்புக்குப் பயன்படும் எண்ணெய்த் தன்மை இல்லாததால் கடலில் இது இறங்காது. நீந்தாது. முக்குளித்து மீன்பிடிக்கவும் செய்யாது. கடல்மேல் துள்ளிப் பாயும் பறவை சாளைகள், கோலா மீன்களைப் பிடித்து இது உணவாகும். அல்லது இதர கடற்பறவைகள் குழியோடிப் பிடித்து வரும் மீன்களை நடுவானில் இது தட்டிப்பறித்து வழிப்பறி செய்து உணவாக்கும்.

கடல் ஊராஞ்சி எனப்படும் அல்பட்ராஸ் பறவைகளுக்கு அடுத்தபடி கடற்பறவைகளில் பெரியது கப்பல்பறவைதான். கப்பல் பறவையால் தரையில் நடக்க முடியாது என்பது கூடுதல் தகவல்.

No comments :

Post a Comment